பால் பாயசம் சுவையாக இருக்க....
தக்காளி, எலுமிச்சை பழம் கெட்டு போகாமல் இருக்க உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
சப்பாத்திக்கு மாவு பிசையும் போது அதில் சிறிதளவு கொண்டைக்கடலை மாவு அல்லது மக்காச்சோள மாவு சேர்த்தால் சப்பாத்தி மிருது வாக வரும்.
பால் பாயசம் செய்யும்போது பாதாம் பருப்பை ஊற வைத்து அரைத்து சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.
பால் பாயசம் செய்வதற்கு பச்சரிசியை களைந்து அரை மணி நேரம் ஊறவைத்து, பாலில் வேகவைக்கவும். பிறகு, சிறிது சிறிதாக பாலை சேர்த்து சர்க்கரை போட்டால் ருசி அதிகமாகும்.
எப்போது அடை செய்தாலும், பருப்புகளுடன் ஒரு பிடி கொள்ளு சேர்த்து அரைத்தால், வாயு தொல்லையும் வராது.
0
Leave a Reply